
கங்கை அமரன், சிவாஜி பேரன் நடித்த லெனின் பாண்டியன் டிரைலர் வெளியீடு
அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் 2வது மகன் தர்ஷன் கணேஷ் நடித்திருக்கும் படம் "லெனின் பாண்டியன்". நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா இப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. கிராமத்து ஆக்சன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த லெனின் பாண்டியன் படம், மணல் கொள்ளையை எதிர்க்கும் காவலரின் கதையாக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!