கர படத்தின் இரண்டாம் பாடல் நாளை (ஏப். 8) வெளியாகிறது
Advertisement
Advertisement
கர படத்தின் இரண்டாம் பாடல் நாளை (ஏப். 8) வெளியாகிறது
ஏப் 07, 2026
அ நிறம் | அளவு
Advertisement
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்ஜரமூடு ஆகியோர் இணைந்து நடித்துள்ள "கர" படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதை தொடர்ந்து இதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கர படத்தில் இருந்து "வாயா என் கரசாமி" என்கிற முதல் பாடல் வெளியாகி தற்போது வரை 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்போது கர படத்தில் இருந்து இரண்டாவது பாடலை நாளை வெளியிடுகின்றனர். தனுஷ், மமிதா பைஜூ சம்மந்தப்பட்ட பாடலாக இது உருவாகி உள்ளது. இந்த போஸ்டரில் இந்த பாடலின் பெயர் மற்றும் எழுதியது யார்? பாடியது யார்? என்பதை எந்த விவரமும் குறிப்பிடவில்லை நாளை இந்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!