
டாக்டர் ராஜசேகருக்கு கம்பேக் கொடுத்த பைக்கர்
1989ல் அவர் நாயகனாக நடித்து வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான "அங்குசம்" தமிழில் "இதுதான்டா போலீஸ்" என்ற பெயரில் டப்பிங் ஆகி இன்றைக்கும் பேசப்படும் ஒரு போலீஸ் படமாக உள்ளது.
தெலுங்கில் கடைசியாக அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்த "பைக்கர்" படம் கடந்த வாரம் தெலுங்கில் வெளியானது. தமிழிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
வெளியான 3 நாட்களில் இப்படம் 18 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் நாயகன் சர்வானந்த், அவரது அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாக்டர் ராஜசேகர் ஆகியோரது நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெவித்து வருகிறார்கள். இப்படம் டாக்டர் ராஜசேகருக்கு ஒரு "கம்பேக்" படமாக அமைந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!