
அதிக சம்பளமா..., பாடல் இல்லாதது ஏன் : லீடர் பட இயக்குனர் விளக்கம்
ஏப் 04, 2026
Advertisement
லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் படம் வெளியானபின் அளித்த பேட்டியில் "நான் இந்த படத்துக்காக அதிக சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இயக்குனர் ஷங்கர், லோகேஷ், அட்லி வரிசையில் என்னை சேர்க்கிறார்கள். வொர்க்கிற்காக இந்த பட்டியலில் இணைக்கலாம். சம்பளத்துக்காக இணைக்க வேண்டாம். லீடர் படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. அடுத்த பாகம் விரைவில் வரும். இந்த பாகத்தில் ஆக் ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பாடல் இல்லை என்கிறார்கள். திரைக்கதை காரணமாக பொழுதுபோக்கு பாடல் வைக்க முடியவில்லை. படத்தில் இடம் பெற்ற முத்தை திரு என்ற திருப்புகழ் பாடலுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு. கருடனை தொடர்ந்து, இந்த படத்தையும் ஆக் ஷன் பாணியில் எடுத்துள்ளேன். நான் வன்முறையை ஊக்குவிக்கவில்லை. படம் பார்த்த வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் ஆக் ஷன் காட்சிகளை, பல சீன்களை பாராட்டியுள்ளனர் என்றார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!