
கயாடு லோஹர் கைவசம் 7 படங்கள்
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் இவராகத்தான் இருப்பார். பள்ளிச்சட்டம்பி, ஐஎம்கேம், தாரம் என 3 மலையாள படத்திலும், தமிழில் இதயம் முரளி, இம்மார்ட்டல் மற்றும் சிம்புவின் 49வது படத்திலும் நடிக்கிறார். இது தவிர "தி பாரடைஸ்" என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதில் "இதயம் முரளி" படம் முடிந்தும் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. அடுத்து வெளிவர இருக்கிற படம் மலையாளத்தில் தயாராகி உள்ள "பள்ளிசட்டம்பி". இதில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடித்துள்ளார்.
குயின், ஜன கன மன படங்களை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி உள்ளர். இது 1950களில் நடப்பது மாதிரியான பீரியட் பிலிம். வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. படம் தமிழிலும் வெளிவருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!