
அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா
அவர் கூறுகையில், ‛‛மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததுமே மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். அந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லி வேடம் கிடைத்திருந்தது. அந்த வேடத்தில் நடித்த போது பல தருணங்களில் எனது நடிப்பை அஜித் மனம் திறந்து பாராட்டினார். அவரது இந்த பாராட்டு அவருடன் பணியாற்றும் கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது. அதோடு பெண்களை மரியாதையுடன் நடத்த கூடியவர் அஜித். அவருடன் இணைந்து நடித்த அந்த தருணம் அருமையானது. அந்த அளவுக்கு அனைவரிடத்திலும் எந்தவித ஈகோ பார்க்காமல் சகஜமாக பழகக் கூடிய ஒரு அற்புதமான நடிகர் அஜித்"" என்று கூறியிருக்கிறார் ரெஜினா.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!