கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம்
Advertisement
Advertisement
கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம்
மார் 27, 2026
அ நிறம் | அளவு
Advertisement
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள "கர" படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மறுபுறம் இந்த படத்திற்கான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. தற்போது இந்த படத்தை தமிழகத்தில் வேல்ஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் சுயமாக வெளியிடுகின்றனர். இந்த படத்தின் பட்ஜெட்டை கணக்கில் கொண்டு பார்த்தால் தமிழகத்தில் கர படம் ரூ. 60 கோடிக்கும் மேல் நிகர வசூல் மற்றும் ரூ. 30 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்தால் தான் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமையும் என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!