
பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம்
ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், தமன், நகுல், மணிகண்டன், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் 2003ல் வெளியான படம் ‛பாய்ஸ்". ஷங்கரா இப்படி ஒரு படத்தை இயக்கினார் என அப்போது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேசமயம் ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
இந்த படம் குறித்து ரத்னம் கூறுகையில், "பாய்ஸ் படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் தான் ஓடவில்லை. தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெற்றி பெற்றது. தமிழில் தியேட்டரில் பெரிதளவில் யாரும் பார்க்கவில்லை. இப்போது நினைத்தால் கூட என்னால் மற்றும் ஷங்கரால் கூட பாய்ஸ் மாதிரி ஒரு படத்தை உருவாக்க முடியாது. இதனால் விரைவில் பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!