
அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
ஆனால், ஒரு வருட காலமாக அப்படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. அப்படம் வெளியான பின்பு அஜித் மோட்டார் ரேஸில் பங்கு பெற துபாயில் கடந்த ஒரு வருடமாக இருந்தார். அப்போதும் இயக்குனர் ஆதிக் அவரைச் சந்தித்து 64வது படத்தின் கதை குறித்து விவாதித்துள்ளார்.
பிப்ரவரி மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். அத்தகவல் வெளியாகியும் ஒரு மாதம் ஆகிவிட்டது. விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் பரபரப்பை ஏற்படுத்தும் அவரது சமகால நடிகராக அஜித் மட்டுமே இருக்கிறார்.
விஜய்யின் இடத்தையும் சேர்த்து அஜித் தான் நிரப்பப் போகிறார் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அஜித்தோ அடுத்த பட அறிவிப்பிற்கே இவ்வளவு தாமதம் செய்து வருகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!