
ரியோ - சானியா அய்யப்பன் இணையும் மேடி
இந்த நிலையில் தான் நடிக்கும் 7வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "மேடி" என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை "மீசைய முறுக்கு, நட்பே துணை, மாஸ்டர், வாரிசு, லியோ" படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திகேயன் என்பவர் இயக்கும் இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக சானியா அய்யப்பன் நடிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் சிங்கம் புலி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, நடிகர் சூரி ரோலிங் சொல்ல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் சொல்ல படப்பிடிப்பு இனிதே தொடங்கியுள்ளது.
இளைஞர்களை கவரும் வகையில் கதை உருவாகிறதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!