
விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது!
"பிச்சைக்காரன்" படத்தை அடுத்து சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் "நூறு சாமி". பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடலின் முதல் வார்த்தையை இந்த படத்தின் டைட்டில் ஆக்கி உள்ளார்கள். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், மே ஒன்றாம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் முதல் பாடலான "மாய கனவோ" என்ற பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு, இந்த பாடல் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!