
ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் சப்தம்
அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் பிப்ரவரி 28ம் தேதி வெளியான படம் "சப்தம்".
தொழில்நுட்ப ரீதியாகப் பேசப்பட்ட படம், விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை. பொதுவாக ஒரு படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். ஆனால், இப்படம் அப்படி வெளியாகவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போதுதான் வெளிவந்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டின் போதே சிக்கலை சந்தித்த படம், ஓடிடியிலும் வெளியாவதற்கு ஒரு வருடங்கள் ஆகிவிட்டது. ஓடிடியிலும் தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளது. மற்ற மொழிகளில் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!