
முக்கிய ஹீரோக்களுடன் அடுத்தடுத்த படங்களில் மமிதா பைஜு
இருந்தாலும் கடந்த வருடத்தின் பெரிய வெற்றிப் படமான "டியூட்" படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் எளிதில் சென்று சேர்ந்தார் மமிதா. அதன்பின் அவரைப் பற்றிய பல விஷயங்கள் ரீல்ஸ்கள், ஷார்ட்ஸ்கள் என வைரலாகப் பரவியது.
தமிழில் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் மமிதா பைஜு. அவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளன.
முதலில் தனுஷுடன் நடித்துள்ள "கர" படம் ஏப்ரல் 30ம் தேதியும், அடுத்து சூர்யாவுடன் நடித்துள்ள "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" படம் ஜுலை மாதத்திலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய்யுடன் நடித்துள்ள "ஜனநாயகன்" படமும் தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் இனி வரும் நாட்களில் மேலும் பேசப்படப் போகும் நடிகையாக மமிதா நிச்சயம் இருப்பார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!