முனீஸ்காந்த் கதைநாயகனாக நடிக்கும் தி டார்ம்
மார் 24, 2026
Advertisement
குட் ஸ்டப் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டில்லி தயாரிக்கும் படம் "தி டார்ம்". தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் இதில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் தீபா ஸ்ரீதர் கூறும்போது “இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. அந்த வகையில் முனீஸ்காந்த் நடித்த கதையம்சமுள்ள படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தயாராகிறது இந்த படம். கதையின் நாயகனாக நடிப்பதோடு கதையை வழிநடத்திச் செல்பவரும் அவர்தான். அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவரும் வகையில் புதுமையான கதை அம்சத்துடன் தயாராகும் "தி டார்ம்" இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்” என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!