
ஆரம்பமாகாத ஆயிரத்தில் ஒருவன் 2 : அடுத்து புதுப்பேட்டை 2 எழுதி முடித்த செல்வராகவன்
தற்போது "மெண்டல் மனதில், 7 ஜி ரெயின்போ காலனி 2" ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ""புதுப்பேட்டை 2" எழுதி முடித்துவிட்டேன்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
"7 ஜி ரெயின்போ காலனி 2" படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி சுமார் இரண்டு வருடங்களாகிறது. ஆனாலும், அந்தப் படத்தை இன்னும் முடிக்கவில்லை. 2024ல் ஆரம்பமாகும் என 2021ம் ஆண்டே "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், இதுவரையிலும் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
அதையும் ஆரம்பித்து, "புதுப்பேட்டை 2" படத்தையும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்வாரா செல்வராகவன் ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!