
குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு
இந்த படம் எனது கேரியரில் முக்கியமான படம். நான் குறைவான படங்களில்தான் நடித்துள்ளேன். பெரிய குடும்பத்து பையன், சிவாஜி பேரன், பிரபு மகன் என்று என்னை விட்டு இயக்குனர்கள் ஒதுங்கினார்கள். எனக்கு பொருந்தாத கேரக்டர்களை விட்டு விலகினேன். இதனால்தான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
குடும்பத்திற்கே தெரியாமல்தான் "கும்கி" படத்தில் நடித்தேன். எனது கதை தேர்வு, நடிப்பு எதிலும் குடும்பம் தலையிடுவதில்லை. ஆனாலும் குடும்ப பெருமை என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் "இவன் யார் தெரியுமா? இன்னார்" என்று ஒதுங்கினார்கள். இதனால் நாட்டை விட்டே ஓடி அமெரிக்காவில் படித்தேன்.
இயக்குனராகும் கனவுடன் திரும்பிய நான் நடிகன் ஆனேன். எந்த படமும் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. எந்த படத்திலும் நான் எளிதாக நடிக்கவில்லை. "டாணாக்காரன்" படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கு மாநில விருது கிடைத்தபோது மகிழ்ந்தேன். "சிறை" வெற்றி என்னை மேலும் மகிழ வைத்துள்ளது. கடுமையாக உழைக்க வேண்டும், பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதை வழியாக கொண்டு பயணிக்கிறேன். என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!