
விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா
இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடியுள்ள நிஷா, மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள "முத்து என்கிற காட்டான்" வெப் தொடரில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, வாட்ச் மெக்கானிக், யானை பாகன், ஆட்டோ டிரைவர், மும்பை தாதாவின் அடியாள் என பல பரிமாணங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஒன்றாக அவர் "கண்மணி நடன குழு"விற்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார். இந்த பகுதியில் அவர் நடன பெண்மணியான நிஷாவை காதலிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. வருகிற 27ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் இது வெளியாகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!