
பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியால் நின்று போன படம்
சிவாஜி, பத்மினி முக்கிய கேரக்டரில் நடிக்க "பதிவிரதா" என்ற படத்தை அறிவித்தார். சிவாஜி, பத்மினி ஆகியோரை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து, அந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். இந்நிறுவனத்தில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும், தொழிலதிபர் சிங்கப்பூர் ராமசாமியும் பங்குதாரர்களாக இணைந்தனர்.
சிவாஜியும், பத்மினியும் காதலிப்பதாக பரவலான செய்திகள் வந்த அந்த நேரத்தில் சிவாஜியும், பத்மினியும் தனிப்பட்ட முறை பயணமாக அமெரிக்கா சென்று விட்டார்கள். இதனால் பதிவிரதா தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படத்தில் பங்குதாரர்களாக சேர்ந்தவர்கள் விலகிக் கொண்டனர். இதனால் படமும் நின்று போனது.
"பதிவிரதா" படத்திற்காக விந்தன் இயற்றி, கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரண்டு திரைப் பாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. பின்னர் அந்த பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தினார் கே.வி.மகாதேவன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!