
மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்!
பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கவுரி ப்ரியா, அப்பாஸ், மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் " ஹாப்பி ராஜ்".
பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!