
அறிவித்துவிட்டு அப்டேட் தராத ஆசை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தை கடைசியாக டிசம்பர் 18ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால், இதுவரை அந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் தரவில்லை. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்படக்குழுவில் உள்ளவர்களுக்குத் தெரியுமா என்பதே ஆச்சரியம்தான்.
இந்த வாரம் மார்ச் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் "ஆசை". கடந்த ஜனவரி மாதமே இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி அறிவித்தார்கள். ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த வாரம் இந்தப் படம் வெளியாகும் என்பதில் உறுதியில்லை என்றே தகவல் வந்துள்ளன.
இப்படத்தை இணைந்து தயாரித்துள்ள பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த வாரம் "தாய் கிழவி" படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் படம் இந்த வாரமும் தாக்குப் பிடித்து ஓடும் என்பதால் "ஆசை" வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும், ஒரு பிரபல நிறுவனம் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதுதானே சரியாக இருக்கும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!