
டாடா போஸ்டர் ஸ்டைலில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போஸ்டர்
தெலுங்கில் முன்னணி இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, ரவீணா டாண்டன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வந்த சூர்யாவின் 46வது படத்திற்கு "விஸ்வநாத் & சன்ஸ்" என்ற தலைப்பை வைத்து முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.
தோளில் வைத்துள்ள "பேபி பேக்"கில் ஒரு குழந்தையுடன் சூர்யா நிற்கும் போஸ்டர்தான் அந்த முதல் பார்வையில் இடம் பெற்றுள்ளது. இது போன்ற ஒரு போஸ்டரை கவின் நடித்து 2023ல் வெளிவந்த "டாடா" படம் படப்பிடிப்பில் இருந்த போதே வெளியிட்டுள்ளார்கள். அதே ஸ்டைலை தற்போது சூர்யா படத்திற்கும் டிசைன் செய்துள்ளார்கள்.
யாருடைய ஆலோசனை என்பது தெரியவில்லை, கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!