
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்
கொடைக்கானலில் உள்ள "குணா குகை" என்றழைக்கப்படும் இடத்தில்தான் அந்தப் படத்தின் களம் அமைக்கப்பட்டிருந்தது. அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். அப்படம் சம்பந்தப்பட்ட அனைவருமே படத்திற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள்.
அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். 2022ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் அத்து மீறி நுழைந்து தகாத நடத்தையில் சிதம்பரம் ஈடுபட்டதாக அந்தப் பெண் அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!