
மார்ச் 6ல் 9 படங்கள் ரிலீஸ்
“99/66, காதல் ரீசெட் ரிபீட், முஸ்தபா முஸ்தபா, மூரி, ஓ பட்டர்பிளை, செல்லமடா நீ எனக்கு, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்,” ஆகிய படங்கள் வெளியவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட "ஆசை" படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதனால், அப்படம் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
தேர்வு காலமாக இருந்தாலும் குறைந்தபட்ச தியேட்டர்கள் கிடைத்தால் கூட போதும், படங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. கடந்த வாரம் வெளியான படங்களில் "தாய் கிழவி" படம் மட்டும் இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை படங்களில் எத்தனை படங்களை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்களோ அதற்கேற்றபடிதான் அப்படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!