
ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்!
ஹிந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த "துரந்தர்" படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு "துரந்தர்" 2ம் பாகம் வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது. தற்போது இத்திரைப்படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக வெளியாகும் என வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் தளத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
மறுபுறம் இதே மார்ச் 19ம் தேதியன்று கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள "டாக்சிக்" படமும் பான் இந்திய படமாக வெளியாகிறது. இந்த படத்தின் நீளமும் 3 மணி நேர 25 நிமிடங்கள் கொண்ட படமாக வெளியாகும் என வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் தளத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த இரண்டு படங்களுக்கும் "ஏ" சான்றிதழ் தான் தணிக்கை கிடைக்க வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!