
தமிழ் வெப் சீரிஸ்களில் முன்னணி நடிகர்கள்
தமிழில் "பரியேறும் பெருமாள்" கதிர் நடித்த "சுழல் 1, 2", அருண் விஜய் நடித்த "தமிழ் ராக்கர்ஸ்", எஸ்ஜே சூர்யா நடித்த "வதந்தி", விமல் நடித்த "விலங்கு", அதர்வா நடித்த "மத்தகம்", விக்ராந்த் நடித்த "எல்பிடபுள்யூ" ஆகியவை இதற்கு முன் வெளிவந்த சில தொடர்கள். சமுத்திரக்கனி முதன் முறையாக நடித்த வெப் சீரிஸ் "தடயம்" நேற்று வெளியானது.
இதற்கடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள "முத்து என்கிற காட்டான்", சசிகுமார் நடித்துள்ள "வதந்தி 2", கதிர் நடித்துள்ள "லிங்கம்" ஆகியவை வெளியாக உள்ளன. "சதுரங்க வேட்டை" நட்டி ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தமிழில் முன்னணியில் உள்ள சில ஓடிடி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெப் சீரிஸ்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!