
கேஜிஎப் 2 டீசர் 279 மில்லியன் : டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ?
அதன் பிறகு 2023ல் வெளிவந்த பிரபாஸ் நடித்த "சலார்" டீசர் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா 2" டீசர் 2024ல் வெளிவந்து 124 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022ல் வெளிவந்த "ஆதி புருஷ்" டீசர் 110 மில்லியன் பார்வைகளுடன் நான்காவது இடத்திலும், 2023ல் வெளிவந்த கன்னடப் படமான "மார்ட்டின்" டீசர் 101 மில்லியன் பார்வைகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
"கேஜிஎப் 2" படத்திற்குப் பிறகு இத்தனை வருட இடைவெளியில் யஷ் நடித்து மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள "டாக்சிக்" டீசர் சில நாட்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. ஆனால், அனைத்து மொழிகளையும் சேர்த்து 56 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் சுமார் 20 நாட்கள் உள்ள நிலையில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்குமா என்பது சந்தேகம்தான்.
5 வருடங்களுக்கு முன்பு வந்த "கேஜிஎப் 2" டீசர், 279 மில்லியன் பார்வைகளைப் பெற்ற நிலையில் அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே "டாக்சிக்" டீசர் பெற்றுள்ளது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!