
ஜனநாயகன் வினியோகஸ்தர்களுக்கு டாக்சிக் மூலம் டானிக் தரும் தயாரிப்பாளர்
கேஜிஎப் 1 மற்றும் 2 படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர் யஷ். மேலும் இப்படத்தின் நயன்தாரா உள்ளிட்ட சில ஹீரோயின்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்குத் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஜனநாயகன்" படத்தை வெளியிடுவதற்காக வாங்கிய வினியோகஸ்தர்கள் படம் வெளியாகாத காரணத்தால் தவித்து வருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் "டாக்சிக்" படத்தின் வினியோகத்தை அவர்களுக்குத் தர கேவிஎன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் படம் வராத காரணத்தால் விரக்தியில் இருக்கும் அவர்களுக்கு இப்படி ஒன்று கிடைத்தால் அது அந்த விரக்திக்கு "டானிக்" கிடைத்தது போல இருக்கும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!