
கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள்
கடந்த வாரம் வரையில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 38, ஓடிடி தளங்களில் வெளியான படங்கள் 3. இந்த வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்து இரண்டு மாதங்களில் வெளியாகியுள்ள படங்களின் எண்ணிக்கை 40ஐக் கடந்து விடும்.
இந்த வார வெளியீடுகள் கணவன், மனைவி இருவரும் மோதிக் கொள்ளும் படங்கள் வெளியாகின்றன. சரத்குமார் கதாநாயகனாக நடித்துள்ள "ஆழி" படமும், ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ள "தாய் கிழவி" படமும் வெளியாகின்றன.
தற்போது சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. அடுத்த வாரம் முதல் மாநில பாடத்திட்ட 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது. டி 20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவற்றிற்கிடையில் தியேட்டர்கள் பக்கம் மக்களை எந்தப் படங்கள் வரவழைக்கப் போகிறதோ ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!