எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார்
பிப் 17, 2026
Advertisement
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த திரைப்பட இய்க்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விருது நடிகை எம்.என்.ராஜத்துக்கும், 2025ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருது இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு முதல்வர் வழங்கினார். இருவருக்கும் விருதுடன் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ்வளர்ச்சித்துறை செயலர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!