
பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா?
அவர் கூறுகையில், ‛‛அந்த கதையை கேள்விப்பட்டு நான் தான் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விக்ரமனை அழைத்து சென்றேன். அதை விஜய் மறந்துவிட்டார். இப்போது அவருடன் வலுவானவர்கள், நல்லவர்கள் இல்லை. விஜயை வைத்து புலி படத்தை தயாரித்தேன். என்னுடன் இருந்தவர்களே போட்டு கொடுத்து என் மீது வருமான வரித்துறை ரெய்டு வர வழைத்தார்கள். ரிலீசுக்கு முதல் நாள் அந்த ரெய்டு வந்தது. அதனால் நிறைய பாதிக்கப்பட்டேன். விஜயிடம் பல ஆண்டுகள் உதவியாளர் ஆக இருந்தவர் செல்வம். இப்போது அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. அவரும் ஆபரேசன் செய்துள்ளார். விஜயிடம் நேரில் கேட்டும் உதவிகள் கிடைக்கவில்லை. என் சார்பில் அவருக்கு 50 ஆயிரம் வழங்கி உள்ளேன்"" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!