ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா
பிப் 16, 2026
Advertisement
திரையுலகின் தற்போதைய பரபரப்பான காதல் ஜோடியாக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா நடிகையான ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இவர்களது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் வரும் செய்திகள் எதற்கும் அவர்கள் மறுப்பு அறிக்கையையும் வெளியிடவில்லை. இதனிடையே, தற்போது இருவருமே படப்பிடிப்பிலிருந்து ஒரு மாதத்திற்கு விடுமுறை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
திருமண வேலைகளைப் பார்ப்பதற்கும், திருமணம் முடிந்த பின் ஹனிமூன் செல்வதற்குமாகச் சேர்த்து ஒரு மாதம் எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளப் போவதில்லையாம். ஒரு சிலர் திருமணம் முடிந்த பிறகே அவர்கள் தங்களது திருமணம் பற்றி அறிவிப்பு வெளியட திட்டமிட்டுள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!