
மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு!
தற்போது கிஷோர் ராஜ்குமார் புதிதாக இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு "கோயம்பத்தூர் மாப்பிள்ளை" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் "கொட்டுக்காளி" படத்தில் நடித்திருந்தார்.
சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த பழைய படங்களின் தலைப்பில் "லவ் டுடே, ஒன்ஸ் மோர், யூத்" ஆகிய படங்களின் வரிசையில் கோயம்பத்தூர் மாப்பிள்ளை தலைப்பையும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!