பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட்
பிப் 14, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் தற்போது கட்அவுட் கலாச்சாரம் குறைந்துவிட்டன. ஆனால் அரசியலில் இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் பெரிய கட்அவுட் என்று "பைரவி" படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு வைத்த 100 அடி உயர ரஜினி கட்அவுட்டை சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே முதன் முறையாக மிக உயரமான கட்அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான்.
சிவாஜி நடித்த சரித்திர படங்களில் முக்கியமானதாக கருதப்படும் "வணங்காமுடி" படத்திற்காக சென்னையின் மைய பகுதியில் இருந்த சித்ரா தியேட்டரில் 80 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது. இதனை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனம் அமைத்தது. இந்த கட்அவுட்தான் அதுவரையில் ஆசியாவில் அமைக்கப்பட்ட கட்அவுட்களில் பெரியது. அதனை அன்றைக்கு இருந்த மீடியாக்கள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டது.
"வணங்காமுடி" படத்தை பி.புல்லையா இயக்கினார். சிவாஜியுடன் நாகய்யா, எம்.கே.ராதா, சாவித்ரி, நம்பியார், ராஜசுலோச்சனா, எம்.சரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1957ம் ஆண்டு வெளியானது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!