சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண்
பிப் 13, 2026
Advertisement
தெலுங்கில் ராம் சரண் நடித்துள்ள படம் பெத்தி. புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 30ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிரி சிக்கிரி என்ற பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த பாடலில் பேசப்பட்ட ஹூக் ஸ்டெப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான ரகசியம் இருக்கிறது. பேட் ஸ்டெப் என்பது ராம் சரணால் உருவாக்கப்பட்டது. அவர் மட்டையை பிடித்து வித்தியாசமான அசைவுகளை நிகழ்த்திய விதம் புதிதாக இருந்தது. அதனால் அந்த அசைவுகளை அவரே வெளிப்படுத்தி சிறப்பாக நடனம் ஆடினார். இப்படித்தான் நடனமாடும் ஒவ்வொரு பாடல்களிலும் தனது சொந்த உழைப்பையும் போடுகிறார் ராம்சரண். இப்படி நடிகர்களே புதிய ஸ்டெப்பை உருவாக்கி ஈடுபாடு காட்டும்போது என்னைப்போன்ற நடன மாஸ்டர்களுக்கு அவர்களுடன் பணியாற்ற ஆர்வம் அதிகரிக்கிறது என்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!