
டாக்சிக் வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு
யஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "கேஜிஎப் 2" படம் தெலுங்கு மாநிலங்களில் மொத்தமாக 130 கோடி தான் வசூலித்தது. அப்படியிருக்கையில் "டாக்சிக்" படத்தின் உரிமை எப்படி 120 கோடிக்குப் போகும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். விஜய் நடித்த "வாரிசு" படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தான் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார்.
"மார்க்கண்டேயா" தெலுங்கு படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜுவிடம் இது குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த தில் ராஜு, “தயாரிப்பாளருக்கு அந்தத் தொகையை நான் பரிமாற்றம் செய்த பின் வங்கிக் கணக்கைக் காட்டினால் நம்புவார்கள்,” என்று பதிலளித்துள்ளார்.
இதுவரையில் எந்த ஒரு தயாரிப்பாளரும் இப்படி பேசியதில்லை. வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்தி பின் தில் ராஜு அதைக் காட்டுவாரா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!