
‛ஜெயிலர் 2 சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார்
இவர்கள் அல்லாமல் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் புதிதாக இணைந்து நடித்து வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவராஜ் குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "ஜெயிலர் 2ம் பாகத்தில் என் கதாபாத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இதில் என்னுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்" என்றார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே சிவராஜ் குமார் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!