
வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ் தாமரை
படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் சினிமாவுக்கு புதிது. இது முதல் படம். இந்த பட நிகழ்ச்சியில்தான் முதலில் சினிமா மேடையில் ஏறினேன். நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன்பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது.
தமிழ் தவிர, மலையாளத்திலும் படம் உருவாகிறது. என்னை படப்பிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு நன்றி. நாடகத்தில் நடித்ததால் சினிமாவில் நடிக்க பயமில்லை. எனக்கு காமெடியான, அழுத்தமான வேடங்களில் நடிக்க ஆசை. குறிப்பாக மனோரமா ஆச்சி மாதிரி பல்வேறு கேரக்டரில் நடித்து, பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும்"" என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!