
பிப்ரவரி 12ல் ஓடிடியில் தலைவர் தம்பி தலைமையில்
சுமார் 10 கோடி செலவில் தயாராகி 40 கோடி வரையில் வசூலாகியுள்ளதாகத் தகவல். தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற, இந்தப் படம் நாளை மறுதினம் பிப்ரவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“கல்யாணத்துல ஆரம்பிச்சு கருமாதி வரைக்கும் பிரச்சன இழுத்து விட்ருச்சே” என்ற பதிவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளிட்டுள்ளது.
பொங்கல் படமான "பராசக்தி" படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் இந்த "தலைவர் தம்பி தலைமையில்" படமும் அதிகம் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஹிந்தி ஓடிடி உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். அம்மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்படுவதால் ஹிந்தியில் ஓடிடியில் வெளியாகவில்லை.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!