
ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : வழக்கை வாபஸ் பெற மனு
அதில் 10 உறுப்பினர்கள் மற்றும் சென்சார்போர்டு மாநில தலைவர் படம் பார்த்து தங்கள் கருத்துகளை சொல்வார்கள். அதற்கேற்ப கட், மியூட் கொடுத்து, சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடைமுறையால் படம் விரைவில் ரிலீஸ் ஆகலாம்.
மறு தணிக்கையிலும் பிரச்னை ஏற்பட்டால், அதிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால், சென்சாரில் அடுத்தகட்ட இன்னொரு மறுதணிக்கை செல்லலாம். அதிலும் சிக்கல் என்றால் மீண்டும் கோர்ட்டை அணுக வேண்டும் என்பது விதி. ஆகவே, ஜனநாயகன் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது. விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!