
தர்பார் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 விலும் இடம்பெற்ற ஜதின் ஷர்மா
இந்த நிலையில் ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஜதின் ஷர்மா, இந்த ஜெயிலர் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படத்திலும் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!