
சரத்குமார் நடிக்கும் ஆழி படம் பிப்ரவரி 27ல் ரிலீஸ்!
"டியூட், கொம்பு சீவி" படங்களை அடுத்து சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் "ஆழி". மாதவ் ராமதாசன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம், கடலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சரத்குமாருடன் தேவிகா சதீஷ், ஸ்ரீ ஜித் ரவி, இந்திரஜித் ஜெகன், வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. அதோடு இந்த படம் வருகிற பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!