
நந்தன் இரண்டாம் பாகம் தயாராகிறது : இயக்குனர் தகவல்
இந்நிலையில் "நந்தன்" படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் இரா.சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ள அவர், "முழுக்க முழுக்க "நந்தன்" படத்தை பற்றி பேசினோம். "நந்தன் 2" படத்தை உருவாக்க மூவரும் தயாராக இருக்கிறோம். விரைவில் நல்ல செய்தி வெளியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இரா சரவணன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் "இரா சரவணன் என் உயிர் நண்பன் எனது கஷ்ட காலங்களில் துணை நின்றவர் அவருக்காக உயிரையே கொடுப்பேன். படம் கொடுக்க மாட்டேனா" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!