
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வந்த படம் "பராசக்தி". ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்த 100வது படமான இது, 1960களில் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் உருவானது. இப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்திருந்த ரவி மோகனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றது.
அதோடு இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும், அரசியல் ரீதியான சர்ச்சைகளும் எழுந்த போதும், 100 கோடி வசூலை கடந்து சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பராசக்தி படம் வருகிற பிப்ரவரி 7ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!