
என் மகன் வேத் நடிக்க வருவான்: ரஜினி மகள் சவுந்தர்யா
சென்னையில் நடந்த விழாவில் சவுந்தர்யா பேசுகையில், ""கோவா படத்தை தயாரித்தேன். 16 ஆண்டுகள் ஓடிவிட்டது. வேறு வேலைகள் காரணமாக படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. சினிமாவில் வெற்றி, தோல்வி என நிறைய பார்த்துவிட்டேன். இப்போது மீண்டும் தீவிரமாக படத்தயாரிப்பில் இறங்கிவிட்டேன். இனி இது தொடரும். வித் லவ் படத்தில் கதை அனைவருக்கும் பிடிக்கும்.
என் மகன் வேத் சினிமாவுக்கு வருவான். அது கண்டிப்பாக நடக்கும். டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை இயக்குனர் மதன் இந்த படத்தை இயக்குகிறார். அதேபோல் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் என்னிடம் கதை சொல்ல வரலாம். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த விழாவுக்கு வந்துள்ளார். அவர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். அவருக்கு நிறைய பொறுப்பு உள்ளது. ஹீரோயின் அனஸ்வராவுக்கு நான் அக்கா மாதிரி. ஹீரோ அபிஷன் ஜீவிந்த்துக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும். நானும் இந்த படக்குழுவில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!