
பிஎம்டபுள்யூ கார் கொடுத்தார் ஜீவா : முத்தம் கொடுத்தார் ஆர்.பி.சவுத்ரி
விழாவில் ஆர்.பி.சவுத்ரி பேசுகையில் ""இந்த படத்தின் வெற்றிக்கு கதைதான் காரணம். படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். ரொம்ப நாளுக்குபின் ஜீவாவுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி. பொதுவாக நான் இந்த மாதிரி விழாக்களுக்கு அதிகம் வருவது இல்லை. இன்று எனக்கு ஜீவா பிஎம்டபுள்யூ கார் வாங்கி கொடுத்ததால் வந்தேன், அவருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன்" என முத்தம் கொடுத்தார்.
மலையாள நடிகர் சுரேஷ்கோபி, ""இன்றைக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். ஆனாலும் நீங்க வரணும் என தயாரிப்பாளர் பிரஷர் கொடுத்தார். தனி விமானத்தை ஏற்பாடு செய்தார். அதில் பயணம் செய்ய எனக்கு ஒத்து வராது. ஆகவே பயணிகள் விமானத்தில் வந்தேன். கொஞ்சம் லேட்டாகிவிட்டது. மலையாளிகள் இந்த படத்தில் அதிகம் பணியாற்றியது மகிழ்ச்சி "" என்று பேசிவிட்டு, எஸ்பிபியின் இளையநிலா பாடலை பாடினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!