
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ?
அவர்கள் இணையும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். தற்போது அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைத் தேர்வு செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
"ஜெயிலர் 2" படத்தைத் தற்போது இயக்கி வரும் நெல்சன் தான் அந்த இயக்குனர் என்கிறார்கள். அவர் சொன்ன கதை ரஜினி, கமல் இருவருக்கும் பிடித்துவிட்டதாம். பட அறிவிப்புக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றின் படப்பிடிப்பையும் பிப்ரவரி மாதம் படம் பிடிக்க வேலைகள் நடந்து வருகிறதாம். அறிவிப்பை வெளியிட்ட பின்பு ஒரு இடைவெளிக்குப் பிறகுதான் படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதாம்.
"ஜெயிலர் 2" படத்தை முடித்த உடன் நெல்சன் இந்தப் படத்தை ஆரம்பிப்பாரா, அல்லது ஏற்கெனவே பேசி வைத்திருந்த தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி முடித்த பின் வருவாரா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!