
ஸ்ருதிஹாசன் 40வது பிறந்தநாள் : தம் அடிக்கிற போஸ்டர் வெளியீடு
அதில் சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக இருந்தார் ஸ்ருதிஹாசன். பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் சாத்விகா ஹீரோயின். ஸ்ருதிஹாசனுக்கு முக்கியமான வேடம். ஒருவேளை வில்லியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால், இப்படிப்பட்ட போஸ்டரை வெளியிட்டு இருப்பதாக தகவல்.
தெலுங்கில் உருவாகும் இந்த படம் மலையாளம், தமிழ், இந்தியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிறந்தநாளில் இப்படிப்பட்ட போஸ்டரை படக்குழு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு முன்னமே ஸ்ருதிஹாசன் ஓகே சொல்லிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்குமுன்பு சில பேட்டிகளில் தனக்கு சில கெட்ட பழக்கம் இருந்தது. பின்னர் அதிலிருந்து விலகிவிட்டேன் என்று ஸ்ருதிஹாசன் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!