
ஜனநாயகன் தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….???
வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் ஜனவரி 20க்கு தள்ளி வைத்தது. அதற்குள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
நேற்று முன்தினம் ஜனவரி 20ம் தேதி வழக்கு விசாரணை அமர்வு முன்பு மீண்டும் வந்தது. இரு தரப்புக்கும் வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் தீர்ப்பை அமர்வு தள்ளி வைத்தது. நாளை ஜனவரி 23ம் தேதிக்கு தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
ஆனால், நாளை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் விடுமுறை. எனவே, ஜனவரி 27ம் தேதிதான் வழங்கப்படலாம் என்றும் தற்போது செய்திகள் வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!