
100 கோடி கிளப்பில் ‛பராசக்தி : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம்
இது குறித்து அவர்கள் கூறுகையில், "டான், டாக்டர், அமரன், மதராஸி படங்களை தொடர்ந்து 5வது முறையாக சிவகார்த்திகேயன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது சாதனைதான். பட ரிலீஸ்க்கு முன்பு இந்த படம் லாபம் பார்த்துவிட்டதாக தகவல். அதனால், வணிக ரீதியாகவும் வெற்றி படம். தவிர, படம் பார்த்தவர்கள் சிவகார்த்திகேயன் கேரக்டரை, நடிப்பை பாராட்டினார்கள். அதனால், விமர்சனங்கள் வந்தாலும் இது வெற்றி படம்தான்.
அதேசமயம், இனிமேல் மதராஸி மாதிரியான ஆக் ஷன் படம், இந்த மாதிரியான சீரியஸ் படங்களை குறைத்துவிட்டு ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் டான், டாக்டர் மாதிரியான கலகல படங்களை அவர் அதிகம் பண்ண வேண்டும் என்பது எங்கள் ஆசை. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதில் ஹீரோயிசமும், காமெடியும் துாக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!