
ஜனநாயகன் வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை
உயர்நீதிமன்ற தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற அமர்வு. வழக்கை ஜனவரி 20ம் தேதிக்கும் தள்ளி வைத்தது. இதையடுத்து கடந்த வாரம் டில்லி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது தயாரிப்பு நிறுவனம். வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை, உயர்நீதிமன்றத்தையே அணுகமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளை நீதிமன்ற அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. என்ன மாதிரியான உத்தரவு வரும் என தயாரிப்பு நிறுவனமும், விஜய்யும், ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி மரணமடைந்த வழக்கின் சிபிஐ விசாரணைக்காக இன்று இரண்டாவது முறையாக ஆஜராகி உள்ளார் விஜய்.
அரசியல், சினிமா என இரண்டிலும் நெருக்கடியில் உள்ளார் விஜய்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!